நரைமுடியை மீண்டும் கருப்பாக்க மருதாணி பொடியுடன் இந்த ஒரு பொருள் போதும்
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை வீட்டிலேயே கருப்பாக மருதாணி பொடியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
மருதாணி பவுடருடன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பின்னர் முடியின் வேர்கள் மற்றும் தலைமுடியில் தடவுங்கள்.
பின்னர் 4 மணி நேரம் அப்படியே ஊற வைத்து தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 3 ஸ்பூன்
- கடுகு எண்ணெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
மருதாணி பொடியுடன்கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தி ஆற வைத்து பின்னர் இதனை தலைமுடியில் தடவுங்கள்.
இந்த கலவை தலைமுடியில் தடவி 2 மணி நேரம் கழித்து கழுவினால் தலைமுடி கருமையாக மாற்றும்.
3. தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
- வாழைப்பழம்- 2
பயன்படுத்தும் முறை
முதலில் பழுத்த வாழைப்பழங்களை எடுத்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் மருதாணி பொடியை கலந்து தலைமுடியில் தடவவும். 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தலைமுடியை அலசுங்கள்.
இதன் மூலம் முடி மென்மையாக மாறும், தலைமுடி உதிர்வது குறையும், தலைமுடி விரைவாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |