பும்ராவின் தாக்குதலில் சரிந்த விக்கெட்டுகள்..சதமடித்து நியூஸிலாந்தை மீட்ட நிக்கோல்ஸ்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹென்றி நிக்கோல்ஸ் சதம் விளாசினார்.
நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஹென்றி நிக்கோல்ஸ், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசினர்.
பும்ரா தாக்குதல் பந்துவீச்சு
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, நியூஸிலாந்து துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
ஜஸ்பிரித் பும்ராவின் (Jasprit Bumrah) மிரட்டலான பந்துவீச்சில் டாம் லாதம் டக்அவுட் ஆனார். அடுத்து கான்வே 4 ஓட்டங்களில் காம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அணியின் ஸ்கோர் 51 ஆக இருந்தபோது, 15 ஓட்டங்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே டேர்ல் மிட்சேலை ஒரு ரன்னில் பும்ரா ஆட்டமிழக்க செய்தார்.
நிக்கோல்ஸ் சதம்
டாம் பிளெண்டலும் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ஓட்டங்கள் என சரிவிற்குள்ளானது.
அப்போது கைகோர்த்த ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls), க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.

நிக்கோல்ஸ் தனது 12-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய, பிலிப்ஸ் அரைசதம் விளாசி டெஸ்ட்டில் 1000 ஓட்டங்களை கடந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹென்றி நிக்கோல்ஸ் 113 ஓட்டங்களுடனும், க்ளென் பிலிப்ஸ் 94 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.