வட அயர்லாந்தை உலுக்கிய போராட்டம்... 13 பேருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வட அயர்லாந்தில் ஹென்றி நோவாக் தொடர்பான போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது ஏறக்குறைய 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உள்ளனர்.
சமூக விரோதிகள்
இது ஹென்றி நோவாக் கொலை வழக்கில் சிக்கிய விக்ரம் திக்பாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை விட மிக அதிகமாகும்.

ஜூன் 2 அன்று நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதற்காக 13 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் மூவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
சவுத்தாம்ப்டனில் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, சமூக விரோதிகள் காவல்துறையினர் மீது குப்பைத் தொட்டிகள், போத்தல்கள், செங்கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வீசினர்.
கடந்த டிசம்பரில், கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 18 வயதான ஹென்றியின் கைகளில் காவலர்கள் விலங்கிட்டனர்; இச்சம்பவம் இரு அடுக்குக் காவல் முறை குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.
இனரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் காவல்துறையினரிடம் பொய் கூறிய, கத்தியுடன் தாக்குதல் நடத்திய 23 வயதான சீக்கியர் திக்பாவுக்கு, கொலைக் குற்றத்திற்காகக் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைவாசத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட கால தண்டனை
நேற்று கலவரக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த தண்டனைக் காலம் 34 ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களை எட்டியது. சவுத்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக மேலும் மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்; இவர்களில் 23 வயதான பெஞ்சமின் ஜோன்ஸும் அடங்குவார், அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

36 வயதான டேரன் மெட்ஹர்ஸ்ட்டுக்கு வியாழக்கிழமையன்று மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை விதிக்கப்பட்டதிலேயே மிக நீண்ட கால தண்டனையாகும்.
பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவரான 18 வயது ஹென்றி சம்பவத்தின் போது இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு விலங்கிட்டதற்காக அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |