ஒல்லியா இருக்க முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருட்கள் போதும்
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு இந்த 2 பொருட்கள் போதும், எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- 2 கைப்பிடி
- கற்றாழை ஜெல்- 3 துண்டு
தயாரிக்கும் முறை
முதலில் முருங்கை இலையை நன்கு பறித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கற்றாழையில் இருந்த அந்த ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் முருங்கை கீரை மற்றும் கற்றாழை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு துணி கொண்டு வடிகட்டி எடுத்தால் ஹேர்பேக் தயார்.
பயன்படுத்தும் முறை
இந்த ஹேர்பேக்கை தலைமுடியில் உச்சந்தலை முதல் முடி வரை நன்கு தடவி மசாஜ் செய்யவும்.
பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர்பேக்கை தொடந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |