நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும் மூலிகை தேநீர்! தினமும் காலை மறக்கமால் குடிங்க!
ஒருவர் கொரோனா உள்ளிட்ட எந்த நோயிலிருந்து குணமடையவும், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானதாக உள்ளது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளளும் படி சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் பரிந்துரைத்துள்ளனர்.
சில மூலிகை தேநீரும் எதிரப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகின்றது.
தற்போது நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும் மூலிகை தேநீர் ஒன்றை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- தண்ணீர் - 250 மி.லி
- மிளகு - 5
- இலவங்க பட்டை - சிறிதளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- எலுமிச்சை - அரைத்துண்டு
- துளசி இலை 10
- கிராம்பு - 4
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
-
இஞ்சி,இலவங்கப்பட்டை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் தண்ணீர் உடன் துளசி இலை மற்றும் 4 கிராம்பு சேர்த்துக்கொள்ளவும். நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
-
இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.