சிறுநீரக கற்களை கரைக்க உதவும் மூலிகை டீ.., எப்படி தயாரிப்பது?
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்கள் சிறுநீரக கற்கள் ஆகும்.
மேலும் மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க உதவும் மூலிகை டீயை எப்படி தயாரிப்பது துன்று பார்க்கலாம்.

எப்படி தயாரிப்பது?
முதலில் சிறுகண் பீளை செடியை வேரோடு பிடுங்கி நன்றாக கழுவ வேண்டும்.
அதன் பூ, இலை, வேர் எல்லாவற்றையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள்.
அதில் 2 டம்ளர் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, 1 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு அது வெதுவெதுப்பாக ஆனதும் வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த டீயை தொடர்ந்து 14 நாட்கள் வரை குடித்து வரலாம்.
குறிப்பாக தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
கிடைக்கும் பிற நன்மைகள்
இந்த டீ சிறுநீரக கற்கள் காரணமாக வரும் வயிற்று வலி, முதுகு வலியை குறைக்க உதவும். கற்களை கரைத்து வெளியேற்றவும் உதவும்.
இதைக் குடிப்பதால் கல்லீரல் சுத்தமாகி, கொழுப்பு கல்லீரல், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் குறையும்.
பெண்களுக்கு பிசிஓடி பிரச்சனையில் உதவி செய்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு கால் வீக்கம் குறைய உதவும்.
மேலும், சிறுநீர் பாதை தொற்றுகளையும் குறைக்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |