வைரஸை விரட்டி நோய் எதிர்ப்பு சக்தியை பெற வேண்டுமா? இந்த மூலிகை நீர்களை எடுத்து கொண்டாலே போதும்!
பொதுவாக பலவகையான மூலிகைகள் கலந்த குடிநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.
இதனால் தான் நமது முன்னோர் அந்த காலம் இந்த காலம் வரை தினமும் ஒரு மூலிகை நீர் எடுத்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
இது உடலுக்கு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.
இந்த காலக்கட்டத்தில் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு மூலிகை நீராவது குடிக்க வேண்டும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
- பதிமுக சக்கைகளை கொதிக்க வைத்து கொடுப்பதன் மூலம் இந்த நீருக்கு நிறமும் மணமும் கிடைக்கும். இந்த நீர் மாதவிடாய்க்காலங்களில் அதிக குருதிபோக்கை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். இது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும் பண்புகளை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது இரத்தஓட்டத்தை சீராக்குகிறது.
- சர்வ சுகந்தி நீரில் கொதிக்க வைத்து குடிப்பதும் உண்டு. இந்த இலைகளில் இருக்கும் வாசனை எண்ணெய் காரணமாக இலைகள் கலந்த நீரினை அருந்தும் போது நல்ல வாசனை உண்டாகிறது. இந்த இலைகளை உணவிலும் சேர்க்கலாம்.
- வெட்டிவேர் பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம், தனியா போன்ற மூலிகைகள் தாகமுக்தி குடிநீர் கலவையில் சேர்கின்றன. ஐந்து லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை கலந்து கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். நன்னாரி கலந்திருப்பதால் இது குடிக்க சர்பத் போல் மணமும் சுவையும் இருக்கலாம்.
- லட்சுமி தரு இலை, பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை தாகசமணி குடிநீர். இது உடலில் தேங்கிய கழிவுகளை அகற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
- சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிக்கலாம். சீரகத்தை நீரில் முதல்நாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் இந்த நீரை குடிக்கலாம்.
- வெந்தய நீர் மழை மற்றும் குளிர் காலங்களில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடிக்கலாம். வெயில் காலங்களில் மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து பின் ஆறிய நீரினை மண் பானைகளில் சேமித்து, வெயிலுக்கு இதமாக குளிர்ந்த நீராக பயன்படுத்தலாம்.இந்த நீர் மூலம் பரவும் நோய்களை முற்றிலுமாகத் தவிர்க்க இந்த மூலிகை நீர் உதவலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022