பிரான்ஸ் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு 15 ஆண்டுகள் சிறை... முதல் பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பு பறிபோனது
பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருவர், 15 ஆண்டுகள் சிறையில் செலவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு காலகட்டத்தில், பிரித்தானிய மகாராணியாரும் இளவரசர் பிலிப்பும் விண்ட்சர் மளிகையில் விருந்தளித்து கௌரவித்த பெண் Rachida Dati (55).
பிரான்சின் முன்னாள் நீதித்துறை அமைச்சராக இருந்த Rachida, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோஸியின் அரசியல் கூட்டாளியும் நண்பரும் ஆவார்.
Renault நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Carlos Ghosn (67)என்பவருக்கு இரகசியமாக ஆலோசகராக பணியாற்றியுள்ளார் Rachida. Carlos தற்போது சர்வதேச அளவில் தேடப்படும் ஒரு குற்றவாளி.
Carlosக்கு இரகசியமாக உதவியதால், தற்போது Rachida மீது, சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஊழலுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதற்கான தண்டனை, 10 ஆண்டுகள் சிறை மற்றும் 128,000 பவுண்டுகள் அபராதம்.
மேலும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து லாபமடைதல் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தண்டனை, 5 ஆண்டுகள் சிறை மற்றும் 320,000 பவுண்டுகள் அபராதம்.
மேலும், Renault முதலான மோட்டார் நிறுவனங்களில் பல மில்லியன் அளவு மோசடி செய்த Carlosஇடமிருந்து Rachida 766,000 பவுண்டுகள் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ள நிலையில், பிரான்சின் முதல் ஜனாதிபதியாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Rachida தற்போது சிறை செல்ல இருக்கிறார்.