பெண்களுக்கு ஏற்ற 5 சிறந்த ஸ்கூட்டர்கள்.., என்னென்ன மொடல்கள்?
பெண்களின் பயன்பாட்டிற்காகவே குறைவான உயரத்தில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter)
சந்தையில் உள்ள ஸ்கூட்டர்களில் மிக பிரபலமான ஒன்று டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter) ஆகும். இந்த ஸ்கூட்டர் தரையில் இருந்து இருக்கையின் உயரமானது 765மிமீ ஆக உள்ளது.
இதன் விலையானது ரூ.75 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டர் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
ஹீரோ ஸூம் 110 (Hero Xoom 110)
மிகவும் பிரபல நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பின் லேட்டஸ்ட் அறிமுகம் ஹீரோ ஸூம் 110 (Hero Xoom 110) ஸ்கூட்டர் ஆகும்.
இந்த ஸ்கூட்டரின் ரைடர் இருக்கை 770மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom) ரூ.72 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak)
நீங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ஸ்கூட்டரின் ரைடர் இருக்கை 760மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom) ரூ.1.15 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest)
குறைவான எடையுடன் இருக்கும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest) -ன் ரைடர் இருக்கையானது 760மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராகும்.
ஹோண்டா டியோ 110 (Honda Dio 110)
மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்ட ஹோண்டா டியோ 110 (Honda Dio 110) ஸ்கூட்டரின் ரைடர் இருக்கை தரையில் இருந்து 765மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom) ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |