வறண்ட கூந்தலை மிருதுவாக்க இதோ சில சூப்பரான டிப்ஸ்!
hair tips
dry hair
By Kishanthini
கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் எல்லாம் சேர்ந்து தான் உங்கள் கூந்தலை பொலிவின்றி வறண்டு போக வைத்து விடுகின்றது.
இதற்கு அதிகம் செலவு செய்து தான் கூந்தலை மிருதுவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் கூந்தலை மிருவாக்க முடியும்.
தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- வாரம் ஒருமுறை கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின் 3 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.
-
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை ஸ்பிரே போன்று பயன்படுத்தலாம்.
-
இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை மைபோல் அரைத்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
-
ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில்படும்படி அக்கலவையை தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும்.
-
எலுமிச்சை பழச்சாறு கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர் பால் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையை காய்ச்சி வடிகட்டி தலை முடியில் தடவினால் வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.
-
முட்டையின் வெள்ளைக்கருவை சிறிதளவு, ஆலிவ் எண்ணெயில் கலந்து கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US