நரிகள் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள் இதோ!
நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு. உருவில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும்.
உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.
காட்டு நரிகளின் ஆயுளை (மூன்றாண்டு) விட, வீட்டில் வளர்க்கப்படும் நரிகளின் ஆயுள்(ஆறுமுதல் ஒன்பது ஆண்டுகள்) அதிகம்.
நரியின் கர்ப்பகாலம் 60−65 நாட்களாகும்.
நரி, தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு. பிற விலங்குகள் உண்டதுபோக, மீதமுள்ள கழிவுமாமிசங்களை உண்பதும் உண்டு. எனவே, நரிக்கு, எப்போதும் உணவுப்பிரச்சினை ஏற்படுவதே கிடையாது.
மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஓடும் நரியானது, தன் இருப்பிட எல்லையை, தன் மலம் மற்றும் சிறுநீர் மூலம் வரையறுக்கும்.
பெண்நரி, ஒரேமுறையில், 2−4 குட்டிகளை ஈனுவதும் உண்டு. நரிக்குட்டி, ஓராண்டிற்குள்ளாகவே, பெருமளவு வளர்ச்சியடைந்துவிடும்.
நரி வெப்பம் தாங்கக்கூடியது. மாலைப் பொழுதில் வேட்டையாட வந்து, அதிகாலைப் பொழுதிற்குள் வேட்டையாடி முடித்து, இருப்பிடம் திரும்பி பகலைக் கழிக்கும்.
இறந்துபோன விலங்குகளின் எச்சங்களை உண்பதில், கழுகுகளுடன் போட்டியும், சண்டையுமிட்டு, உண்ணும் ஒரே விலங்கு நரி மட்டுமே.