முழு சார்ஜில் 40 km செல்லலாம்! Hero Lectro நிறுவனத்தின் புது E-Cycles அறிமுகம்
பிரபல எலெக்ட்ரிக் சைக்கிள் (e-Cycle) உற்பத்தி நிறுவனமான ஹீரோ லெக்ட்ரா (Hero Lectro) நிறுவனமானது இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Hero Lectro E-Cycles அறிமுகம்
ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro) தன்னுடைய எச்4 (H4) மற்றும் எச்7 பிளஸ் (H7+) என்னும் இரண்டு இ-சைக்கிள்களை (e-Cycles) அறிமுகம் செய்துள்ளது. அதன் விலைகள் H4 e-Cycle ரூ.32,499 எனவும், H7+ e-Cycle ரூ.33,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் சைக்கிளானது இந்தியர்களுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
H4 e-Cycle சிறப்பம்சங்கள்
இந்த H4 e-Cycle குறைவான தூரத்திற்கு பயன்படுத்தும் சைக்கிளாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 7.8 Ah / 36V Battery pack பயன்படுத்தப்பட்டுள்ளது. முழு சார்ஜில் இந்த சைக்கிளில் சுமார் 40 கிமீ தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
இதை நாம் முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4.5 மணி நேரங்கள் ஆகும். இதில் 6V / 250W BLDC மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் Top speed மணிக்கு 25 km ஆகும். இதனால், இந்த சைக்கிளை ஓட்டுவதற்கு License தேவையில்லை.
மேலும், LED screen, rigid fork 160 மிமீ அளவுள்ள ரோடார் கொண்ட Disc brakes வழங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
H7+ e-Cycle சிறப்பம்சங்கள்
இந்த சைக்கிளை ஸ்டார்ட் செய்வதற்கு பிரத்யேகமான சாவி ஒன்றும், ஓர் முழுசார்ஜில் 40 கிமீ பயணம் செய்ய கூடிய Battery pack வழங்கப்பட்டுள்ளது.
இதில், 80 mm suspension, 250 watt electric motor ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதன் Top speed மணிக்கு 25 km ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |