ஃபுல் சார்ஜில் 165 கி.மீ. ரேஞ்ச்., Hero-வின் புதிய Vida V2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை நிறுவனமான Vida தனது மின்சார ஸ்கூட்டர் Vida V1 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Vida V2 Lite, V2 Plus மற்றும் V2 Pro ஆகிய மூன்று வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் V2 Lite,புதிய வேரியண்ட் ஆகும்.
Vida V2-வின் ஆரம்ப விலை ரூ.96,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டாப் வேரியண்ட் Vida V2 Pro-வில் ரூ .1.35 லட்சம் வரை செல்கிறது.
இந்த மின்சார ஸ்கூட்டருடன் நிறுவனம் 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாகன உத்தரவாதத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் பேட்டரி பேக்கில் 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ உத்தரவாதம் உள்ளது.
Vida V2 Pro வேரியண்ட்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 94 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
புதிய Hero Vida V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் Ather Rizta, Ather 450X, Ola S1 range, Bajaj Chetak மற்றும் TVS iQube போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |