300 பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்த 116 வயது மூதாட்டி மரணம்
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வாழ்ந்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.
அமெரிக்காவின் மிகவும் வயதான பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஹெஸ்டர் ஃபோர்டு (Hester Ford) கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த தாக்க அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஹெஸ்டர் ஃபோர்டு 1905 அல்லது 1904-ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவர் தனது 14 வயதில் ஜான் ஃபோர்டு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 12 குழந்தைகள், 68 பேரக்குழந்தைகள், 125 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான ஹெஸ்டர் ஃபோர்டு ஸ்பானிஷ் காய்ச்சல், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் குடிசார் உரிமைகள் இயக்கம் என பல உலக வரலாற்று நிகழ்வுகளைக் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.