அனல் பறந்த ஆட்டம்! நரைன் அணியை நொறுக்கிய ஹெட்மையர்
சர்வதேச லீக் டி20 போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
ஹால்ஸ் 53 ஓட்டங்கள்
ஷார்ஜாவில் நடந்த ILT20 போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 
முதலில் களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்தது.
அலெக்ஸ் ஹால்ஸ் (Alex Hales) 37 பந்துகளில் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) 53 ஓட்டங்களும், ஆந்த்ரே ரஸல் (Andre Russell) 23 பந்துகளில் 36 ஓட்டங்களும் விளாசினர்.
ஹெட்மையர் ருத்ர தாண்டவம்
பின்னர் ஆடிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி 34 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது டென் லாரன்ஸ் நிதானமாக ஆட, ஷிம்ரோன் ஹெட்மையர் ருத்ர தாண்டவம் ஆடினார்.
லாரன்ஸ் 35 (32) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷிம்ரோன் ஹெட்மையர் (Shimron Hetmyer) 48 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். 
இறுதிக்கட்டத்தில் சரவெடி ஆட்டம் ஆடிய குஸைமா தன்வீர் 12 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுக்க, டெசர்ட் வைப்பர்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஜய் குமார் 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசிய ஹெட்மையர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |