நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே அவுட்: புரட்டியெடுத்த ஹோப், ஹெட்மையர்
Guyana amazon warriors beat trinbago: CPL டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியார்ஸிடம் தோல்வியுற்றது.
மெஹிதி ஹசன் அபாரம்
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியார்ஸ் அணிகள் மோதிய CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் காலின் மன்ரோ 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் சந்தித்த முதல் பந்திலேயே மிராஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜஸ்டின் கிரேவ்ஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 126 ஓட்டங்களே எடுத்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோஸப் 2 விக்கெட்டுகளும், பிரிட்டோரியஸ் மற்றும் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், ஷிம்ரான் ஹெட்மையர் 19 பந்துகளில் 28 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள்) விளாசி வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, கயானா அணி 18.4 ஓவர்களில் 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |