ஹெட்மையர், ரூதர்போர்டு சிக்ஸர்மழை: நியூஸிலாந்தை புரட்டியெடுத்த மேற்கிந்திய தீவுகள்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் போட்டி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படோஸில் நடந்தது.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணியில் வில் யங் 56 ஓட்டங்களும், நிக் கெல்லி 64 ஓட்டங்களும் எடுத்தனர்.
டாம் லாதம் 69 ஓட்டங்கள் விளாச நியூஸிலாந்து அணி 268 ஓட்டங்கள் எடுத்தது. விட்டல் லாவ்ஸ், அல்ஸாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளும், மேத்யூ ஃபோர்ட், சீல்ஸ் மற்றும் மோட்டி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஹெட்மையர் சிக்ஸர்
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷெர்பானே ரூதர்போர்டு, ஷிம்ரோன் ஹெட்மையர் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.

இவர்களது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 47.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ஷிம்ரோன் ஹெட்மையர் (Shimron Hetmyer) 69 (64) ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 61 (58) ஓட்டங்களும் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) எடுத்தனர்.
தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து
ஜேக்கப் டுஃபி, ஜேடன் லென்னொக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், நேதன் ஸ்மித் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து அணி தோல்வியுற்றாலும் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஜேடன் லென்னொக்ஸ் (Jayden Lennox) தொடர் நாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |