டெல்லி அணியில் இவருக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை! அஸ்வின் ஓபன் டாக்
டெல்லி கேபிடல்ஸ் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், Shimron Hetmyer பாராட்டியுள்ளார்.
நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது, இதற்கு முக்கிய காரணம் Shimron Hetmyer தான்.
இந்நிலையில் சென்னை உடனான வெற்றிக்கு பின் காணொளி காட்சி மூலம் செய்தியளார்களை சந்தித்த டெல்லி கேபிடல்ஸ் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெல்லி அணி பெற்றுள்ள புள்ளிகளில் 6-8 புள்ளிகளுக்கு மேல் Hetmyer-க்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அவர் பல போட்டிகளில் கடைசியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறவைத்துள்ளார்.
கடைசியில் அடிக்கும் 25, 30 ரன்களுக்கு கிடைக்கு வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆரம்ப பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் எடுத்துவிடுகிறார்கள்.
டெல்லி அணியில் இருக்கும் ஹீரோக்களில் Hetmyer-ம் ஒருவர், டிரஸ்ஸிங் ரூமிற்குள் தான் அவருடைய திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.