203 ரன் இலக்கு: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த ஹெட்மையர்..26 பந்தில் 64 ஓட்டங்கள் (வீடியோ)
மேஜர் லீக் டி20 போட்டியில் ஹெட்மையரின் அதிரடியில், சியாட்டல் ஓர்கஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம்
டல்லாஸில் நேற்று நடந்த போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சியாட்டல் ஓர்கஸ் அணிகள் மோதின.
Out of the stadium 🚀
— Los Angeles Knight Riders (@LA_KnightRiders) June 29, 2025
Andre Russell | #WeAreLAKR | #CognizantMLC2025 | #MajorLeagueCricket pic.twitter.com/Z2iD9XTUxR
முதலில் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்து. ஆந்த்ரே ரஸல் 39 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
ரோவ்மன் பௌல் 43 (21) ஓட்டங்களும், சைப் பாடர் 41 (21) ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சியாட்டல் அணியில் ஆரோன் ஜோன்ஸ் 38 பந்துகளில் 73 ஓட்டங்கள் விளாசினார்.
ஹெட்மையர் விளாசல்
ருத்ர தண்டவமாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி அரைசதம் விளாசினார். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்களே தேவைப்பட்டது.
ஆனால் வான் ஸ்கால்க்விக் துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
Shimron Hetmyer takes Stake Player of the Match for the second night in a row ‼️@StakeIND x @stakenewsindia pic.twitter.com/j4L7Df9bu9
— Cognizant Major League Cricket (@MLCricket) June 29, 2025
2 பந்துகளில் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஹெட்மையர் 5வது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு அணியை வெற்றி பெற வைத்தார்.
அவர் 26 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |