சிக்ஸருக்கு சென்ற பந்தை ஸ்பைடர்மேன் போல் கேட்ச் செய்த வீரர்! உறைந்து போன எதிரணி..வைரலாகும் வீடியோ
- ஸ்பைடர்மேன் போல் பறந்து கேட்ச் பிடித்த ஹெட்மையர்
- முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
ஜமைக்காவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர் கப்தில் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஓடியன் ஸ்மித் பந்துவீச்சை எதிர்கொண்ட கப்தில், அந்த ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார்.
ஆனால் எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஹெட்மையர், கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்ற அந்த பந்தை தாவி ஒற்றைக் கையில் பிடித்து மிரட்டினார்.
An absolute World Class grab by Hetmyer! #WIvNZ
— Windies Cricket (@windiescricket) August 10, 2022
Live Scorecard - https://t.co/Itog2lZ5u9 pic.twitter.com/6vjsErC3NY
அவரது இந்த கேட்சை பார்த்த களத்தில் இருந்த வீரர்கள் உறைந்து நின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
How good was that catch by @SHetmyer ! ??#flyingHetmyer #MaroonMagic #MenInMaroon #WIvNZ pic.twitter.com/4WQewJmPHG
— Windies Cricket (@windiescricket) August 10, 2022