வெறித்தனமான ஆட்டத்தை காட்டிய வீரர்! 13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 149 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஹெட்மையரின் மிரட்டலான கேட்ச்
ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக ஜேசன் ராய் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் இருந்து ஹெட்மையர், ஸ்பைடர்மேன் போல் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.
How good was that catch by @SHetmyer to dismiss Jason Roy.
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Live - https://t.co/jOscjlr121 #TATAIPL #KKRvRR #IPL2023 pic.twitter.com/AeaGnIwkss
சஹாலின் மாயாஜாலம்
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
@IPL (Twitter)
அதன் பின்னர், யுஸ்வேந்திரா சஹாலின் மாயாஜால சுழலில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராஜஸ்தானின் சஹால் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆசிப் மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
@IPL (Twitter)
ருத்ர தாண்டவம் ஆடிய ஜெய்ஸ்வால்
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஓட்டங்கள் எடுக்காமல் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் சாம்சன் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் ஜெய்ஸ்வால் வெறித்தனமாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
@IPL (Twitter)
இவர்களது கூட்டணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
150 runs chased down in just 13.1 overs. @rajasthanroyals have won this in a jiffy with Yashasvi Jaiswal smashing an incredible 98* from just 47 balls.
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Scorecard - https://t.co/jOscjlr121 #TATAIPL #KKRvRR #IPL2023 pic.twitter.com/2u0TiGPByI