சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? செம்பருத்தி பூ இப்படி பயன்படுத்துங்க
செம்பருத்தி பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக கரும்புள்ளிகளை போக்கி முகத்தை பளிச் சென்று மாற்ற உதவுகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- செம்பருத்தி பூ - 1
- தயிர் - 1 டீஸ்பூன்
- முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்
- ரோஜா பூ - 1
செய்முறை
முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும்.
கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி பளிச் என்று மாறும். செம்பருத்தி பூ. இலை இரண்டுமே சருமத்துக்கும் கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக பங்குவகிக்கின்றன.
செம்பருத்தி பூவை இதழ்களை தனியே பிரிக்காமல் அப்படியே காயவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும்.