உங்களுக்கு வறண்ட சருமமா? இதனை போக்க செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க
செம்பருத்தி பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன.
இது பல மருத்துவநன்மைகளை வழங்குகின்றது. அது மட்டுமின்றி சரும பராமரிப்பு உதவுகின்றது.
குறிப்பாக இதனை வறண்ட சருமம் கொண்டவர்கள் பயன்படுத்தலாம். தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.
Image courtesy: Shutterstock
தேவையான பொருட்கள்
- செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி
- ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும்.
பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் முகத்தில் போட்டு வந்தால் வறண்ட சருமம் படிப்படியாக சரியாகும்.