நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற உதவும் செம்பருத்தி பொடி - எப்படி தெரியுமா?
நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை பராமரிப்பது என்பது சற்று கடினமான விடயமாகும். ஆனால் அவை அனைத்து பெண்களின் அழகையும் மேம்படுத்தும்.
இப்போதெல்லாம், பல காரணங்களால், முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைத்தல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
மாசு, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல காரணங்களால் முடி நரைக்கப்படுகிறது.
உங்கள் தலைமுடி முன்கூட்டியே நரைக்கத் தொடங்கியிருந்தால், சரியான முடி பராமரிப்புடன், அதைத் தடுக்க உங்கள் உணவிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அந்தவகையில் செம்பருத்திப் பூ முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கும்.
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்கவும் உதவுகிறது.
செம்பருத்தி பூவை உணவில் சேர்ப்பது எப்படி?
-
செம்பருத்தி பூக்களை வேகவைத்து அதன் தேநீரை அருந்தலாம்.
-
செம்பருத்திப் பூக்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- செம்பருத்திப் பூக்களின் சாறு அல்லது அதன் பொடியையும் எடுத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |