கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி ஒன்று போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 5
- செம்பருத்தி இலை- 5
- கடலை ஜெல்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம- 5
- வெந்தயம்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்தி இலை, பூ, கற்றாழை ஜெல், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் தலைமுடி வலுவாக்கும் செம்பருத்தி ஹேர் பேக் ரெடி.
இந்த பேக்கை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை தடவி சுமார் அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும்.
இதையடுத்து வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி எடுத்துக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |