அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி பூ.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 4
- செம்பருத்தி இலை- 5
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்த விழுதுடன் தயிர் சேர்த்து, கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலக்கவும்.

இதற்கடுத்து இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும்.
பின்னர் இதனை தலையில் ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடரந்து பயன்படுத்தி வர முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |