மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி இலை தோசை!
பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.
இதில் செய்யப்படும் தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி இலை தோசை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
herzindagi
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி இலை-6
- அரிசி - 1 கப்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவிய பின், தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
3-4 நேரம் கழித்து, சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி இலைகளுடன் ஊற வைத்த அரிசி வெந்தைய கலவையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
Nutritionist aditi prabhu
இந்த மாவை குறைந்தது 6-8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்க வேண்டும்.
மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்த பிறகு சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |