இந்தியாவில் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் எது தெரியுமா?
இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரயில் நிலையம் எது என்பதை பார்க்கலாம்.
நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம்
இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் உலகில் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ளது. அதாவது, 132,310 கிலோமீட்டர்கள் (82,210 மைல்கள்) நீளமுள்ள பாதையில் 7,335 ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது. இ
ந்த பரந்த நெட்வொர்க்கிற்கு மத்தியில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை ஒரு ரயில் நிலையம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகின் மிக நீளமான ரயில் நிலையப் பெயர்களில் ஒன்றாகும். இந்த ரயில் நிலையத்தின் அதிகாரப்பூர்வ பெயர் “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் (Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station) ஆகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக உள்ளது.
இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெயரானது 57 எழுத்துகள் கொண்டுள்ளது" என்று கூறியுள்ளது.
முன்னதாக மெட்ராஸ் சென்ட்ரல் என்றும் பின்னர் சென்னை சென்ட்ரல் என்றும் அழைக்கப்பட்ட இந்த நிலையம், கடந்த 2019 -ம் ஆண்டில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று மாற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவாக ரயில் நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற அதிமுக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இந்த ரயில் நிலையம் சென்னையை வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளான கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. தென்னிந்தியாவின் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
இதனிடையே, வேல்ஸில் உள்ள “Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwlllantysiliogogogoch” என்பது உலகின் மிக நீளமான ரயில் நிலையப் பெயராகும். இந்த பெயர் 58 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |