இலங்கைக்கு தனது படைகளை அனுப்பும் இந்தியா? இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விளக்கம்
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சமூகக் வலைத்தளங்கில் பரவும் தகவல் உண்மையில்லை என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சொத்துக்களை சூறையாடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது.
அதில், 'இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சமூகக் வலைத்தளங்கில் பரவும் தகவல் உண்மையில்லை. இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கும் ' தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Spokesperson of Ministry of External Affairs of India clearly stated yesterday that #India is fully supportive of Sri Lanka's democracy, stability and economic recovery. (2/2)
— India in Sri Lanka (@IndiainSL) May 11, 2022