பதவி விலகும் மிலிந்த மொரகொட: முடிவை இலங்கை ஜனாதிபதி ரணிலிடம் அறிவிப்பு
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொரகொட தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகும் மிலிந்த மொரகொட
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொரகொட வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தன்னுடைய பதவியில் இருந்து விலகி இலங்கைக்கு திரும்ப முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அவரது முடிவு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்
மிலிந்த மொரகொட உயர் ஆணையர் என்பதை வழக்கமாக கொண்டிராத அரசியல்வாதி ஆவார், இவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த உயர் ஆணையர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது மற்றும் வளர்ப்பது ஆகியவற்றில் தன்னுடைய முக்கிய பங்கினை மேற்கொண்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவின் மின்சாரக் கட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் விரிவான மூலோபாயத்தை தன்னுடைய காலத்தில் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |