சொத்துக்களை மறைத்த வழக்கு; முதல்வர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
madras high court dismiss cm vijay petition in asset case: முதல்வர் விஜய் பிரமாண பத்திரத்தில் சொத்துக்களை மறைத்ததாக தாக்கல் செய்த தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென முதல்வர் விஜய் அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, பெரம்பூர் எம்எல்ஏவாக முதலமைச்சர் பதவியை ஏற்றார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நில மற்றும் வருமான விவரங்களை மறைத்துள்ளதாக வாக்காளர் எஸ். தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள சிறுசிறு முரண்பாடுகள் தனது தேர்தலை ரத்து செய்வதற்கு ஒரு காரணமாகாது என்றும், ஏனெனில் அவை தேர்தல் முடிவை எவ்வாறு பாதித்தன என்பதைக் காட்டுவதற்கு எந்த முக்கிய விவரங்களும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வருமானம் மற்றும் நில விவரங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக வாக்காளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள், விசாரணை மூலமாக மட்டுமே விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று கூறி, முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.