கொரோனாவால் திடீரென அன்பிற்குரியவர்களை இழக்கும் பிரித்தானியர்கள்: ஆவிகளுடன் பேசுவோரிடம் செல்வது அதிகரிப்பு
கொரோனாவால் திடீரென அன்பிற்குரியவர்களை இழக்கும் பிரித்தானியர்கள், இழப்பை தாங்க இயலாமல் ஆவிகளுடன் பேசுவோர் மூலம் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம்.
ஒரு நாள் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய லண்டனில் வாழும் ஜிம் (60) என்பவர், தன் மனைவியிடம் தனக்கு உடல் வலிப்பதாகவும், தலைக்குள் ஏதோ இடிப்பது போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜிம். நான்காவது நாள் ஜிம்மின் மனைவி கேட்டுக்கும் (52) கொரோனா தொற்று கண்டறியப்பட, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பின், அவரது கண்களுக்கு முன்னாலேயே ஜிம்மின் உயிர் பிரிய, கணவனின் பிரிவை கேட்டால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
பின்னர் குணமடைந்து கேட் வீடு திரும்பினாலும், அவரால் கொரோனா தொற்றலாம் என அஞ்சி, யாரும் அவரை சந்திக்க வரவில்லை, வந்தவர்களும் ஜன்னலுக்கு வெளியே நின்று பார்த்துவிட்டுப் போய்விட, தனிமை கேட்டை வாட்ட ஆரம்பித்தது. கணவரை பயங்கரமாக மிஸ் பண்ண ஆரம்பித்தார் கேட்.
அப்போதுதான், ஆவிகளுடன் பேசுபவர்களைக் குறித்து சொல்லியிருக்கிறார் ஒரு நண்பர். முதலில் தயங்கினாலும், பிறகு ஆவிகளுடன் பேசும் Dundee என்ற இடத்தில் வசிக்கும் June Field என்ற பெண்ணை சந்தித்திருக்கிறார் கேட்.
அவரிடம், கேட் கேட்ட முதல் கேள்வி, என் கணவர் பயந்திருக்கிறாரா என்பதுதான்! ஆம், அவர் முதலில் மிகவும் பயந்திருந்தார், இப்போது ரிலாக்சாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் June.
அதன் பிறகுதான் கேட்டுக்கு கொஞ்சம் மனதுக்கு நிம்மதி கிடைத்திருக்கிறது. மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று வருகிறார் அவர்.
முதல் உலகப்போரில் ஏராளமானோர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தபோது, இழப்பைத் தாங்க இயலாமல் ஆவிகளுடன் பேசுவோரை அணுகத் தொடங்கினார்களாம்.
இப்போது கொரோனா ஏராளமானோரை பலிகொள்ள, மீண்டும் பிரித்தானியர்கள் ஆவிகளுடன் பேசுவோரை தொடர்பு கொண்டு, தங்கள் அன்பிற்குரியவர்களைக் குறித்து விசாரிப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம்!


