சுவிட்சர்லாந்துக்கு புதிதாக வருபவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல்
சுவிட்சர்லாந்துக்கு புதிதாக வருபவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கலான நிலை காணப்படுகிறது.
வீட்டு வாடகை உயர்வு
இந்த ஆண்டு, வீட்டு வாடகைகள் சராசரியாக 3 சதவிகிதம் வரை உயரலாம் என, நேற்று Credit Suisse நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு விடத் தயாராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கும், வீடு தேவைப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள இடைவெளியே இந்த வாடகை உயர்வுக்குக் காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வீடுகள் குறைவு, ஆட்கள் அதிகம்
அதாவது, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கான அனுமதிகள் 1,500 குறைவாகவே இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்தலோ முந்தைய ஆண்டைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காரணங்களால்தான் சுவிட்சர்லாந்துக்கு புதிதாக வருபவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கலான நிலை காணப்படுவதாகக் கருதப்படுகிறது.