உடலிற்கு சத்தான புரோட்டீன் நிறைந்த தானிய தோசை.., எப்படி செய்வது?
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளோடு, உணவு முறையும் அவசியம், குறிப்பாக புரோட்டீன் உணவுகளும் அவசியம்.
அந்தவகையில், சத்தான புரோட்டீன் நிறைந்த தானிய தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு- 1 கப்
- துவரம் பருப்பு- 1 கப்
- வேர்க்கடலை- 1 கப்
- ஜவ்வரிசி- 1 கப்
- அரிசி- 1 கப்
- உளுந்து- 1 கப்
- கடலை பருப்பு- 1 கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 2
- புதினா- 5 இலை
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சை பயிறு, துவரம் பருப்பு, வேர்க்கடலை, ஜவ்வரிசி, அரிசி, உளுந்து, கடலை பருப்பு, வெந்தயம் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனையுடன் இஞ்சி, பச்சைமிளகாய், புதினா, சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து மாவை தோசை போல் சுட்டு எடுத்தால் சத்தான புரோட்டீன் நிறைந்த தானிய தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |