கால்சியம் சத்து நிறைந்த ராகி லட்டு.., எப்படி செய்வது?
High Protein Ragi Laddu- ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், சத்து நிறைந்த ராகி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- வறுத்த வேர்க்கடலை- ½ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு மாற்று சுடு தண்ணீர் சேர்த்து பிணைந்து நெய் தடவி வைத்துக்கொள்ளவும்.
பின் இதனை வட்டமாக தட்டி தவாவில் இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து ராகி ரொட்டியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து மிக்ஸி ஜாரில் வெல்லம், வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவைகளை சேர்த்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக கைகளில் நெய் தடவி இதனை லட்டுவாக பிடித்தால் சத்தான ராகி லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |