அதிக வாடகை, மோசடிகள்... கனடாவுக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களின் உண்மை நிலை

India Canada Student Visa
By Balamanuvelan Sep 05, 2023 11:20 AM GMT
Report

ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒரு பக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா.

அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள்.

ஏமாந்து திரும்பிச் செல்லும் மக்கள்

கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.

இப்படி, வேலைக்குப் போன சிலர் ஏமாந்து போய் அமைதியாக நாடு திரும்பிவிட, படிக்கப்போகும் பிள்ளைகளுக்கு, அதுபோல படிப்பை பாதியில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்ப முடியாத ஒரு நிலை...

நேற்று வரை பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக் கனவுகளுடன் கனடா கனவுகளும் சேர்ந்துகொள்ள கனடாவுக்கு வந்தால், இங்கே தங்க இடம் பிடிப்பதற்குள்ளேயே பிள்ளைகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சொந்த நாட்டில் தம்மை நம்பி ஒரு குடும்பம் இருப்பதை எண்ணி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், கனடாவிலும் சரியான உதவிகள் கிடைக்காமலும் திணறிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டம் சர்வதேச மாணவர்கள்.

17,000 அடி நடந்தும் வீடு கிடைக்காமல் தவிக்கும் இந்திய மாணவர்

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தார் கேஷவ் (Keshav Malhotra, 20). வந்த நாள் முதல் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார் அவர்.

அதிக வாடகை, மோசடிகள்... கனடாவுக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களின் உண்மை நிலை | High Rent House In Canada Students Leave

(Jeff Stapleton/CBC)

இதுவரை 17,000 அடிகள் நடந்துவிட்டேன், இதுவரை தங்குவதற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை என்கிறார் கேஷவ். நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், வீட்டைப் போய் பார்த்தால் விளம்பரத்தில் காட்டப்பட்டதற்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேபோல, ஒரு குளியலறை கொண்ட ஒரு குடியிருப்பில் எட்டுபேர் வரை தங்கினாலும், அதற்கும் எக்கச்சக்க வாடகை கேட்கப்படுகிறது என்கிறார் அவர்.

ஏற்கனவே, கனடா கல்லூரிகள் பல சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நம்பித்தான் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இப்போது, வீட்டு உரிமையாளர்களும் இந்த மாணவர்களை நம்பி வருவாய் பார்க்க முடிவுசெய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

வீடு தட்டுப்பாட்டுக்கு மாணவர்கள் மீதே குற்றச்சாட்டு

இதற்கிடையில், கடந்த சில மாதங்கள் முன் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது.

அதாவது, சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு படிக்க வருகிறார்கள். அவர்கள் கனடாவில் செட்டில் ஆனதும், அவர்களை நம்பி அவர்களுடைய குடும்பத்தினர் கனடாவுக்கு வருகிறார்கள். ஆக, ஒரு மாணவரை நம்பி இத்தனை பேர் வருகிறார்களே என கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது கனடா.

அதிக வாடகை, மோசடிகள்... கனடாவுக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களின் உண்மை நிலை | High Rent House In Canada Students Leave

(Jeff Stapleton/CBC)

ஆக, சர்வதேச மாணவர்களால் தான் கனடாவில் வீடுகளுக்குத் தட்டுப்பாடு என்று கூறி, மாணவர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது கனடா.

அப்புறம் எதற்கு ஜம்பமாக, நாங்கள் ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என பெருமையடித்துக்கொள்ளவேண்டும்?

அதிக வாடகை, மோசடிகள்... கனடாவுக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களின் உண்மை நிலை | High Rent House In Canada Students Leave

(Jeff Stapleton/CBC)

கனடாவுக்கு, வேலை செய்ய ஆட்கள் தேவை. ஆனால், படித்துமுடித்து வேலைக்கு செல்லும் சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவந்தால் மட்டும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US