அதிக ஆபத்து... இந்த ஐரோப்பிய நாட்டிற்கு பயணிக்க வேண்டாம்! நாட்டு மக்களுக்கு ஜேர்மனி அரசாங்கம் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தை கொரோனா வைரஸால் அதிக ஆபத்துள்ள நாடாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
போலந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனாவால் ‘அதிக ஆபத்துள்ள பகுதி’ என்று வகைப்படுத்துவதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சகம் கூறியது.
போலந்து கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த ஏழு நாட்களில் 100,000 மக்களுக்கு என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.
அதிக தொற்று விகிதங்கள் காரணமாக போலந்திற்கு அத்தியாவசியமற்ற மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிப்பதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல் ஞாயிற்றுக்கிழமை முதல் போலந்திலிருந்து எல்லையைத் தாண்டி வரும் அனைவரும் கொரோனா வைரஸ் இல்லை என்ற பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.