மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆபத்தான கைதி: மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய ஆபத்தான கைதி
மான்செஸ்டர் மருத்துவமனையில் மர்வான் ஜும்மா என்ற 20 வயது கைதி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கைதி மர்வான் ஜும்மா-வை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தப்பித்த மர்வான் ஜும்மா, பெண்கள் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கடுமையான காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

தேடுதல் வேட்டை தீவிரம்
மர்வான் ஜும்மாவை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் சிறப்பு பிரிவினர் இந்த தேடுதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தப்பியோடிய ஜும்மா கடைசியாக ராட்க்ளிஃப் பகுதியில் பார்க்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பரி, ப்ரெஸ்ட்விச், க்ரம்சால் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஜும்மாவை பார்த்தால் அவரை பிடிக்கவோ அல்லது நெருங்கவோ வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |