பாரீஸுக்கு செல்வதை தவிர்க்கவும்... சுவிட்சர்லாந்து ரயில்வே அமைச்சகம் ஆலோசனை
பிரான்சின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறியுள்ளது சுவிஸ் பெடரல் ரயில்வே அமைச்சகம்.
சுவிஸ் பாரீஸ் அதிவேக ரயில்கள் ரத்து
சுவிட்சர்லாந்தில் லாசேன் மற்றும் ஜெனீவாவிலிருந்து பாரீஸ் செல்லும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை, பேசல் மற்றும் சூரிச்சிலிருந்து பாரீஸ் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களில் பயணிப்பதற்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கிய பயணிகள், அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சில பாதைகளில் மரங்கள் விழுந்துகிடப்பதாகவும், ஒரு ரயில் விழுந்துகிடந்த மரங்கள் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சைப் பொருத்தவரை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ரயில்கள் ரத்து மற்றும் தாமதத்தால், சுமார் 80,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பிரான்ஸ் ரயில்வே தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |