நீங்கள் நேரடியாக குறிவைக்கப்படலாம்: பிரித்தானிய குடிமக்களுக்கு எச்சரிக்கை
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் தனது குடிமக்களுக்கான திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முக்கிய நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பயங்கரவாதம், கடத்தல் மற்றும் மதவெறி வன்முறைகள் நடக்க வாய்ப்புள்ளது. பயண ஆலோசனையின் சமீபத்திய புதுப்பிப்பில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகியவை அச்சுறுத்தல் வலுவாக உள்ள இடங்கள்" என்று FCDO தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) பிரித்தானிய குடியிருப்பாளர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கு பயணிப்பவர்களுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
AFP
நேரடியாக குறிவைக்கப்படலாம்
'வெளிநாட்டினர், குறிப்பாக மேற்கத்தியர்கள் நேரடியாக குறிவைக்கப்படலாம். பாகிஸ்தான் முழுவதும் அரசியல் கூட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகள் உட்பட அனைத்து கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைத் தவிர்க்கவும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்று FCDO எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள Baujar, Mohmand, Khyber, Orakzai, Kurram, North Waziristan மற்றும் தெற்கு வசிரிஸ்தான் ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்தானிய அதன் குடிமக்கள் செல்லக்கூடாது என்றும் FCDO அறிவுறுத்தியது.
Credit: AFP
சாலையில் பயணிக்க வேண்டாம்
கைபர்-பக்துன்க்வா மற்றும் பெஷாவர் நகரம் மற்றும் மாவட்டத்தின் சார்சத்தா, கோஹட், டேங்க், பன்னு, லக்கி, தேரா இஸ்மாயில் கான், ஸ்வாட், புனர் மற்றும் லோயர் டிர் மாவட்டங்களுக்கும், N45 சாலையில் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மர்தான் ரிங்-ரோட்டின் வடக்கிலிருந்து சித்ரால் மாவட்டம் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லைகள் வரை (பலுசிஸ்தானின் தெற்கு கடற்கரையைத் தவிர) பிரித்தானியர்கள் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |