சுவிட்சர்லாந்தில் உயர இருக்கும் ரயில் பயணக்கட்டணம்: எவ்வளவு, எப்போது உயர்வு?
சுவிட்சர்லாந்தில் ரயில் டிக்கெட்களின் விலைகள் உயர இருக்கின்றன.
எவ்வளவு உயர்வு?
இந்த உயர்வு எல்லோருக்கும் ஒரே சீரான உயர்வு அல்ல. AG பாஸ் வைத்திருப்பவர்கள்தான் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
முதல் வகுப்பு டிக்கெட்கள் விலை 1.9 சதவிகிதமும், இரண்டாம் வகுப்புக் கட்டணம் 4.8 சதவிகிதமும் உயர உள்ளன.
© SBB CFF FFS
வருடாந்திர AG பயணச்சீட்டுகள் விலை 5.1 சதவிகிதம் உயர உள்ளது, பெரியவர்களுக்கான பாதிவிலை பாஸ் கட்டணம் 5 சுவிஸ் ஃப்ராங்குகள் உயர்ந்து 190 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆக உள்ளது.
ஆனால், இளைஞர்களுக்கான பாதி விலை பாஸ், மற்றும் இளைஞர்களுக்கான இதர டிக்கெட்கள் விலையில் மட்டும் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும்?
2023 டிசம்பர் 10 முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்த இறுதி அறிவிப்பு 2023 ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.