சுவிட்சர்லாந்தில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலானோர் மரணம்: குழப்பத்தில் நிபுணர்கள்
சுவிட்சர்லாந்தில் எதிர்பார்த்ததைவிட 3,000 பேர் கூடுதலாக மரணம்.
மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியாததால் நிபுணர்கள் குழப்பம்.
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து, எதிர்பார்த்ததைவிட 3,000 பேர் கூடுதலாக மரணமடைந்துள்ள விடயம் நிபுணர்களை குழப்பமடையச் செய்துள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. ஒன்று, அதீத வெப்பம், மற்றொன்று, கோவிட் காலகட்டம்.
Bern பல்கலையின் தொற்றுநோயியல் நிபுணரான Christian Althaus, இந்த கூடுதல் மரணங்களின் பின்னணியில், அதீத வெப்பமும் கோவிட் காலகட்டமும் இருக்கலாம் என்கிறார். கோவிட் இதய நோயாளிகளின் பிரச்சினையை அதிகரிக்க, அதன் காரணமாக அதீத வெப்பநிலையால் அவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
மற்றொரு தொற்றுநோயியல் நிபுணரான Martin Röösli என்பவர், முன்னர் கோவிடால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, அதீத வெப்பத்தின் விளைவுகளால் எளிதில் பாதிக்கப்படலாம் என்று கருதுகிறார்.
ஆனாலும், இப்போதைக்கு இந்த எதிர்பாராத மரணங்களுக்கான காரணம் கேள்விக்குறியாகவே உள்ளது.