இலங்கையில் அதிக செலவீனத்தைக் கொண்ட மக்கள் வாழும் மாவட்டம் எது தெரியுமா?
இலங்கையில் வாழும் சராசரியான ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 17,014 அவசியம் என இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகம் செலவு செய்யும் மக்கள் வாழும் மாவட்டம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதில் தான் இலங்கையில் வாழும் சராசரியான ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேவைப்படும் பணத்தொகையானது வெளியிப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் குறிப்பட்ட தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாவட்ட ரீதியில் மாற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிகமான செலவை மேற்கொள்ளும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒரு தனிநபரின் மாதாந்த செலவு ரூ. 18,350 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறைந்த செலவை செய்யும் மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தங்களது அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ. 16,268 மட்டுமே பயன்படுத்துகிறார் என இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதாந்தம் ரூ. 68,560 தேவைப்படுவதாகவும் இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |