ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?
ஒவ்வொரு படத்திற்கு பிறகும் நடிகை, நடிகர்களின் சம்பளம் அதிகமாகுவது வழக்கம்.
அந்த வகையில் ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையின் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்று நடிகையின் சொத்து மதிப்பு ரூபாய் 900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது ஜப்பான், கொரியன் மற்றும் இந்திய நடிகைகளின் சொத்துமதிப்பைக் காட்டிலும் இவரிடம் தான் அதிகம் சொத்து மதிப்பு உள்ளது.
இவருக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய் ஆகும்.
அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர்.
கடந்த 2018ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக மூன்று மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார்.
வரி ஏய்ப்பு செய்ததற்காக மட்டுமே அவரது தற்போதைய சொத்து மதிப்பை விட அதிக அபராதமாக 1000 கோடி ரூபாய் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |