கனடாவில் மணிக்கு 7,200 டொலர் சம்பளம் பெறும் ஊழியர்கள்: விரிவான பின்னணி
கனடாவில் பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக செயல்படுவோருக்கு அளிக்கப்படும் சம்பளம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிக்கு 7,162 டொலர்
கனடாவில் மிக அதிக சம்பளம் பெறும் 100 தலைமை நிர்வாக அதிகாரிகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ள அமைப்பு ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரிகள் பொறுப்புக்கு பெரும்பாலும் ஆண்களே நியமிக்கப்பட்டுகிறார்கள்.
Credit: Nathan Denette
2021ல் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவருக்கு சராசரியாக ஆண்டுக்கு 14.3 மில்லியன் டொலர் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2022ல் இது 14.9 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
அதாவது மணிக்கு 7,162 டொலர் தொகையை தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் சம்பளமாக பெறுகிறார். இது சராசரி கனேடிய தொழிலாளி ஒருவர் சம்பாதிப்பதை விட 246 மடங்கு அதிகம்.
மேலும், புத்தாண்டின் இரண்டாவது நாள் முடிவதற்குள், சராசரி தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் சராசரி கனேடிய தொழிலாளி ஒருவரின் வருடாந்திர சம்பளத்தை ஏற்கனவே சம்பாதித்துவிட்டார் என்றே ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் சராசரி தொழிலாளி ஒருவரின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவிகிதம் அதிகரிக்கும் போது, ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 4.4 சதவிகிதம் சராசரியாக அதிகரித்துள்ளது.
நால்வர் மட்டுமே பெண்கள்
இந்த நிலையில், விலைவாசி உயர்வானது 2022ல் 6.8 சதவிகிதமாக இருந்துள்ளது. பெரும்பாலான தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு சம்பளமாக பெருந்தொகை அளிக்கப்படுவதில்லை மாறாக ஊக்கத்தொகை, நிறுவனத்தின் பங்குகளில் சில சதவிகிதம் உள்ளிட்டவையாகவே வழங்கப்படுகிறது.
Credit: Chung Chow
மட்டுமின்றி, சில தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு சம்பளம் என்பதே அளிக்கப்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் Restaurant Brands International நிறுவனத்தின் நிர்வாக தலைவரான J. Patrick Doyle என்பவரே பெருந்தொகை சம்பளமாக பெறுகிறார்.
2022ல் இவர் 151.8 மில்லியன் கனேடிய டொலர் அளவுக்கு சம்பாதித்துள்ளார். இரண்டாவது இடத்தில் Dye & Durham நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Matthew Proud உள்ளார். இவர் 2022ல் 98.9 மில்லியன் கனேடிய டொலர்கள் தொகையை பங்குகள் அடிப்படையில் சம்பாதித்துள்ளார்.
3வது இடத்தில் Magna International நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Seetarama (Swamy) Kotagiri என்பவர் உள்ளார். இவர் மொத்தமாக 36.4 மில்லியன் கனேடிய டொலர்கள் சம்பாதித்துள்ளார்.
பெருந்தொகை சம்பளமாக பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் 100 பேர்கள் கொண்ட பட்டியலில் வெறும் நால்வர் மட்டுமே பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |