அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவர் தான்
ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுடன், அதன் முதலீட்டிலும் பல எண்ணிக்கையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
உறவினர்கள் உயர் பொறுப்புகளில்
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 1918,000 கோடி என்றே கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 930,602 கோடி என தெரிய வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானி மட்டுமின்றி, அவரது உறவினர்கள் பலரும் உயர் பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவர் தான் Hital Meswani. இவர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தொடக்க காலத்து நிறுவன இயக்குநர்களில் ஒருவரான Rasiklal Meswani என்பவரின் மகன்.
இந்த Rasiklal Meswani என்பவரின் கீழில் தான் முகேஷ் அம்பானி தொழில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். Hital Meswani தான் குஜராத்தில் ஜாம்நகரில் அமைந்துள்ள பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மூளையாக செயல்பட்டவர்.
இவரே ரிலையன்ஸ் குழுமத்து நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபர். இவரும் இவரது சகோதரர் நிக்கில் மேஸ்வானியும் தலா ரூ 24 கோடி சம்பளமாக வாங்குகின்றனர்.
ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு முதன்மை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் Hital Meswani என்றே கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தில் வேலை
ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவது மட்டுமின்றி, சொந்தமாக நிறுவனம் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். தற்போது 55 வயதாகும் Hital Meswani கடந்த 1990ல் ரிலையன்ஸ் குழுமத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அதன் பின்னர் 1995ல் இருந்து நிர்வாக பொறுப்பில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் பல்கலைக்கழக படிப்பை முடித்துள்ள இவர் தொழில்முறை கல்வியையும் அங்கேயே முடித்துள்ளார்.
இவரது தந்தை Rasiklal Meswani திருபாய் அம்பானியுடன் பணியாற்றியவர். மட்டுமின்றி திருபாய் அம்பானியின் மருமகன் இந்த Rasiklal Meswani என்பது குறிப்பிடத்தக்கது.