2023ல் அதிக சம்பளம் பெற்ற இந்திய CEO-க்கள்! பட்டியலை வெளியிட்ட Forbes
2023 ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்களில் அதிக சம்பளம் பெற்ற சி.இ.ஓக்களின் பட்டியலை Forbes வெளியிட்டுள்ளது.
Forbes வெளியிட்ட பட்டியல்
1. முதலாவதாக ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் (HCL Technologies) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) விஜயகுமார் ஆண்டுக்கு ரூபாய் 130 கோடி வரை ஊதியம் பெற்றுள்ளார்.
2.இரண்டாவதாக விப்ரோ (WIPRO) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட் ஆண்டுக்கு ரூபாய் 82 கோடி வரை ஊதியம் பெற்றுள்ளார்.
3. அடுத்து, இன்ஃபோசிஸ் (INFOSYS) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலில் பரேக் ரூ.56.44 கோடியை ஆண்டுக்கு ஊதியமாக பெற்றுள்ளார்.
4.டி.சி.எஸ் (TATA CONSULTANCY SERVICES) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாத் ஆண்டுக்கு ரூபாய் 29.16 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார். இவரின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய தலைமை செயல் அதிகாரியாக கே. கிருத்திவாசன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. இந்துஸ்தான் (HINDUSTHAN) யூனிலிவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் மேத்தா ஆண்டுக்கு ரூபாய் 22.36 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.
6. இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (Indian Hotels Company Limited) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புனீத் சத்வால் ஆண்டுக்கு ரூபாய் 18.2 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இந்த நிறுவனமானது, ஓய்வு விடுதிகளை நடத்துவது, விமான சேவைகளை வழங்குவது போன்ற பல சேவைகளை செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |