ஜேர்மனியில் எந்தெந்த வேலைகளுக்கு அதிக ஊதியம், குறைந்த ஊதியம் தரும் வேலைகள் எவை?
கடந்த வாரம், ஜேர்மனியின் வேலைவாய்ப்பு தளமான Stepstone, ஜேர்மனியில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைக் குறித்த தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
ஜேர்மனியில் சராசரி ஆண்டு வருமானம் 43,800 யூரோக்கள் ஆகும்.
அதன் அடிப்படையில் எந்தெந்த வேலைகளுக்கு அதிக ஊதியம், குறைவான வருவாய் தரும் வேலைகள் எவை என பார்க்கலாம்.
அதிக ஊதியம் வழங்கும் வேலைகள்
மருத்துவர்கள்: ஆண்டுக்கு 93,800 யூரோக்கள்
Management consultants: ஆண்டுக்கு 54,000 யூரோக்கள்
பொறியாளர்கள் : ஆண்டுக்கு 52,600 யூரோக்கள்
தகவல் தொழில்நுட்பத்துறையினர்: ஆண்டுக்கு 52,000 யூரோக்கள்
ஆக, மருத்துவர்கள் சராசரி ஊதியத்தைவிட இரண்டு மடங்கு ஊதியம் பெறுகிறார்கள்.
துறை வாரியாகப் பார்த்தால் அதிக வருவாய் கொண்ட துறை வங்கித்துறை, அதன் ஊழியர்கள் ஆண்டொன்றிற்கு 57,600 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.
குறைந்த வருவாய் தரும் வேலைகள்
குறைந்த வருவாய் எனப் பார்த்தால் கைவினைக்கலைஞர்கள் சராசரியாக 37,500 யூரோக்களும், விவசாயத்துறை பணியாளர்கள், வனத்துறையினர் மற்றும் மீனவர்கள் 36,100 யூரோக்களும் வருவாய் ஈட்டுகிறார்கள். குறைந்தபட்சமாக விருந்தோம்பல் துறையினர் 34,200 யூரோக்கள் வருவாய் பார்க்கிறார்கள்.
picture alliance/dpa | Boris Roessler