கல்வித் தகுதி தேவையில்லை... 90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள்
பிரித்தானியாவில் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லாத, ஆனால் அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பில் இணைய பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
20 வேலை வாய்ப்புகள்
பல்கலைக்கழக படிப்பு எதுவும் தேவையில்லாத, அதிக ஊதியம் வழங்கும் சுமார் 20 வேலை வாய்ப்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 33,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் அவை எனவும் அந்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில வேலைக்கு ஆண்டுக்கு 90,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பல வேலை வாய்ப்புகளுக்கு முறையான அறிவும் திறமையும் தான் முதன்மையாக பார்க்கப்படுகிறது, கல்வித் தகுதியல்ல.
கேசினோ கேமிங் மேலாளர் வேலைக்கு ஆண்டுக்கு 90,000 பவுண்டுகள் ஊதியம் வழங்குகின்றனர். பெரும்பாலான வேலை வாய்ப்புகளுக்கு, தொடர்புடைய நிறுவனமே பயிற்சியும் அளிக்கிறது.
அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளுக்கு பல்கலைக்கழக பட்டம் மட்டுமே போதுமானது என்ற நிலை தற்போது மாறி வருகிறது. scrum master, ethical hacker உள்ளிட்ட அதிக ஊதிய வழங்கும் வேலை வாய்ப்புகளுக்கு பல்கலைக்கழக பட்டம் தேவை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அதிகமாக ஊதியம்
scrum master வேலைக்கு 62,000 பவுண்டுக்குகளுக்கும் அதிகமாக ஊதியம் வழங்குகின்றனர். வணிகமுறை விமானிகள், ஹேக்கர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் தற்போது 60,000 பவுண்டுகள் வரையில் ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளுக்கு பட்டப்படிப்பு தேவை இல்லை என்றாலும், முறையான தகுதி இருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஆண்டுக்கு 50,000 பவுண்டுகள் முதல் 60,000 பவுண்டுகள் வரையில் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இன்னொரு 8 வேலை வாய்ப்புகளுக்கு ஆண்டுக்கு 43,000 பவுண்டுகள் முதல் 46,000 பவுண்டுகள் வரையில் ஊதியமாக வழங்கப்படுகிறது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        