வேலைக்காக வெளிநாடு செல்ல நினைப்பவரா நீங்கள்? - உங்களுக்கான சிறந்த தேர்வு இந்த நாடு தான்
பொதுவாகவே அனைவருக்கும் வெளிநாட்டிற்கு சென்று உழைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். உள்ளூரில் இருந்து சம்பாதிப்பது போதாது.
எனவே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என நினைப்பார்கள்.
அதற்காக பல முயற்சியும் செய்வது உண்டு. அனைத்து இளைஞர்களின் இலக்கும் அமெரிக்கா மற்றும் கனடா செல்வதாக தான் இருக்கும்.
ஆனால் அவ்வளவு தூரம் செல்வதற்கு பதிலாக நீங்கள் உங்கள் நாட்டிற்கு அருகில் இருக்கும் நாட்டிற்கே செல்லலாம்.
அந்தவகையில் நீங்கள் எந்த நாட்டில் உழைத்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகம் சம்பாதிக்க சிறந்த நாடு எது தெரியுமா?
உள்நாட்டை பொறுத்தளவில் தொழிலாளி முதல் அதிகாரி சரை அனைவருமே நல்ல சம்பளத்துடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் எவருக்கும் எதிர்பார்த்த சம்பளம் கிடைப்பதில்லை. அதே சமயத்தில் வளைகுடா நாடுகளில் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலனவர்கள் துபாயிற்கு வேலைக்காக செல்கின்றனர். தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு நினைத்ததை விட அதிகளவு சம்பளத்தை பெறுகின்றனர். அவ்வாறு கிடைக்கும் சம்பளம் என்ன என்று பார்க்கலாம்.
- துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 45,000 ரூபாய் ஆகும்.
- 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் 68,000 ரூபாய் ஆகும்.
- ஒரு ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்தால், மாதம் 10,070 திர்ஹம் அதாவது 2 ,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
- பல் மருத்துவர் மாதத்திற்கு 39,120 திர்ஹம்கள் கிடைக்கும். இந்திய ரூபாயில் 8 ,00,000 ரூபாய்க்கு மேலாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |